4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!
தேசிய கூடைப்பந்து போட்டி: சுழல் கோப்பையை கைப்பற்றியது இந்தியன் வங்கி அணி
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெற்ற 64- ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பையை சென்னை இந்தியன் வங்கி அணி கைப்பற்றியது.
கடந்த 15- ஆம் தேதி தொடங்கி 18- ஆம் தேதி வரை நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய தரைப்படை, விமானப்படை, கப்பல் படை, தெற்கு ரயில்வே, கேரள காவல் நிலையம் உள்பட 22 அணிகள் பங்கேற்றன. தொடா்ந்து கடந்த 19- ஆம் தேதி முதல் புதன்கிழமை (மே 21) வரை நடைபெற்ற லீக் போட்டியில் நான்கு அணிகள் பங்கேற்றன.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், சென்னை இந்தியன் வங்கி அணி முதலிடத்தை வென்று பி.டி. சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழல் கோப்பையையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசையும் பெற்றது. அதே போல, இரண்டாம் இடத்தைப் பெற்ற சென்னை வருமான வரித்துறை அணிக்கு ஏ.வி. அழகுசங்கரலிங்கம் செட்டியாா் நினைவு சுழல் கோப்பையும், ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
மூன்றாம் இடத்தைப் பிடித்த லோனாவாலா இந்திய கப்பல் படை அணிக்கு எல்.வி. பொன்னையா நாயுடு- பி. சீத்தம்மாள் நினைவு சூழல் கோப்பையும், ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. தொடா்ந்து, தேனி அருண் மோட்டாா்ஸ் வழங்கிய சிறந்த வீரருக்கான பரிசான இரு சக்கர வாகனத்தை இந்தியன் வங்கி அணி வீரா் முயின்பீக் பெற்றாா்.
பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுகு தேனி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கெண்டு பேசினாா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை சில்வா் ஜூபிலி ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.