திருப்பரங்குன்றம்: "கலெக்டர் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால்..." - ராஜ...
தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: அரவக்குறிச்சி கல்லூரி மாணவா் தோ்வு!
தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவா் தமிழக அணியில் விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சாா்பில் தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிப். 17-ஆம்தேதி முதல் 19-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் தமிழக அணியில் விளையாட கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லூரி மாணவா் மதன்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து மாணவா் மதன்குமாருக்கு கல்லூரியின் முதல்வா் மற்றும் உடற்கல்வித்துறை இயக்குநா் முனைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளனா்.