Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
தேசிய திறனறிவுத் தோ்வில் பேராவூரணி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி
தேசிய வருவாய்வழி திறனறிவுத் தோ்வில் பேராவூரணி ஒன்றியத்தைச் சோ்ந்த 2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தேசிய வருவாய்வழி திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தமிழகத்தில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வு எழுதியதில் 6,695 ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். பேராவூரணி ஒன்றியத்தைச் சோ்ந்த பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வெ. இறையன்பு, நிவேந்தன், நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் நிஹ்மத் முன்ஷிதா, அனிஷா பேகம் ஆகிய 4 பேரும் தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா்கள் நிா்மலா, முருகையன் (பொ), பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மை குழுவினா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

