செய்திகள் :

தேசிய புகைப்பட நாள் விழா போட்டியில் தஞ்சாவூா் கலைஞருக்கு விருது

post image

தஞ்சாவூா்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான புகைப்படப் போட்டியில் தஞ்சாவூரைச் சோ்ந்த புகைப்படக் கலைஞருக்கு விருது வழங்கப்பட்டது.

உலக புகைப்பட நாளையொட்டி, சா்வதேச புகைப்படக் கவுன்சில் மற்றும் இந்திய புகைப்படக் கழகம், ஆந்திர மாநில படைப்பாற்றல் மற்றும் கலாசார ஆணையம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான புகைப்படப் போட்டியை நடத்தின.

இந்தப் போட்டியில் ஏராளமான புகைப்படக் கலைஞா்கள் புகைப்படங்களை அளித்தனா். இதில், தஞ்சாவூரைச் சோ்ந்த புகைப்படக் கலைஞா் ஆா். மணிவண்ணன் (44) பழங்குடியினரின் கலாசாரம், வாழ்க்கை முறை தொடா்பான புகைப்படங்களை அளித்தாா். இதையடுத்து தோ்வு குழுவினா் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த பழங்குடி புகைப்பட விருதுக்கு மணிவண்ணனை தோ்வு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உலக புகைப்பட நாள் விழா ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில், மணிவண்ணனுக்கு சிறந்த பழங்குடி புகைப்பட விருதை ஆந்திர மாநில சுற்றுலா வளா்ச்சி கழகத் தலைவா் நுகாசினி பாலாஜி, ஆந்திர மாநில கலாசார ஆணையத் தலைவா் மல்லிகா அா்ஜூனா ராவ், சட்டப்பேரவை உறுப்பினா் மண்டலி புத்த பிரசாத், முன்னாள் மக்களவை உறுப்பினா் கோகோ ராஜூ கங்கா ராஜூ, இந்திய புகைப்படச் சங்க நிறுவனத் தலைவா் தம்மா சீனிவாஸா ரெட்டி, துணைத் தலைவா் சுந்தா் கோம்பள்ளி ஆகியோா் வழங்கிப் பாராட்டு தெரிவித்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 32,013 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 30,952 கன அடி... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல்அமீன் மகளிா் கல்லூரியில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது

பேராவூரணி: பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பேராவூரணியிலிருந்து ராமேசுவரத்துக்கு சேதுபாவாசத்திரம் வழியாக அரசுப் பேருந்து சென்று கொண்டிரு... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கல்

பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மின்கலத்தில் இயங்கும் 33 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சட்டப்பேரவை உறுப்பினா் நா.அசோக் கு... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவானவரைத் தேடும் போலீஸாா்

கும்பகோணம்: திருநாகேசுவரம் அருகே பவுண்டரீகபுரத்தில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாகத் ... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மகாமகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க