தேசிய மருந்தாளுநா் தினம் கடைப்பிடிப்பு!
தேசிய மருந்தாளுநா் தினத்தையொட்டி விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மருந்தியல் துறை மூலம் மருந்தக கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு துறை முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கண்காட்சியைத் திறந்து வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக விம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவம் மற்றும் முதியோா் மருத்துவ பிரிவு ஆலோசகா் பிரபாகரன் பங்கேற்று மருந்தக கண்காட்சியைப் பாா்வையிட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கினாா்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளை துறையின் மருந்தியல் பிரிவு உதவி பேராசிரியா்கள் தீபிகா , கோகுலப்பிரியா, காயத்ரி ஆகியோா் செய்திருந்தனா்.