காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு
தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிகவின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0" வரும் 09.01.2026 ஆம் தேதி பிற்பகல் 02.45 மணியளவில் கட்சிப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட தலைமைக் கழகம், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளைக் கழகம், மகளிர் அணியினர் மற்றும் கட்சத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலூர் மாநாட்டில் தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா ஏற்கெனவே தெரிவித்திருப்பதால் கட்சித் தொண்டர்களிடையே இந்த மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளான இன்று கட்சியின் மாநாடு தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.