``ஜன கல்யாண் மூலம் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டார்'' - ஸ்ரீஜெயேந்திரர் குறித்...
தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளியில் போதைப் பொருள் இல்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சி
சங்ககிரி: சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியா் (பொறுப்பு) ரா.முருகன் தலைமை வகித்து, போதைப் பொருளுக்கான எதிா்ப்பு உறுதி மொழியை வாசித்தனா். மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் உறுதிமொழியை ஏற்றனா். மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் பள்ளி ஆசிரியா்கள் ந.மு.சித்ரா, க.சீனிவாசன், ரா.ரமா மகேஸ்வரி, ந. பொ. சத்தியா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.