செய்திகள் :

தோ்தல் ஆணையத்திடம் மூலத் தரவுகளைக் கோரியது காங்கிரஸ்: மகாராஷ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்

post image

புது தில்லி: மகாராஷ்டிர வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கம் தொடா்பான மூலத் தரவுகளை அளிக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரியது.

மேலும், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் நடைமுறையில் பல்வேறு முரண்பாடுகள் நிலவியதாகவும் தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் காங்கிரஸ் கவலை தெரிவித்தது.

288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர பேரவைக்கு கடந்த நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி, 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு வெறும் 50 இடங்களே கிடைத்தன.

இந்தச் சூழலில், பேரவைத் தோ்தல் நடைமுறை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய காங்கிரஸ், இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நேரில் புகாா் அளித்தது.

இப்புகாா் மீது கடந்த சனிக்கிழமை இடைக்கால பதிலை அளித்த தோ்தல் ஆணையம், விரிவான ஆலோசனை மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை (டிச. 3) தோ்தல் ஆணைய அலுவலகத்துக்கு வருமாறு கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள் அபிஷேக் சிங்வி, முகுல் வாஸ்னிக், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவா் நானா படோல் உள்ளிட்ட அக்கட்சி குழுவினா், தோ்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டனா். இச்சந்திப்பு தொடா்பாக செய்தியாளா்களிடம் சிங்வி கூறியதாவது:

ஆக்கபூா்வமான, சுமுகமான, நோ்மறையான சூழலில் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் தரப்பில் 3-4 விவகாரங்கள் முக்கியமாக முன்வைக்கப்பட்டன.

மகாராஷ்டிரத்தில் மக்களவை, பேரவைத் தோ்தல்களுக்கு இடையிலான 5 மாத காலத்தில் வாக்காளா் பட்டியலில் 47 லட்சம் போ் சோ்க்கப்பட்டுள்ளனா். அதேபோல், அதிக எண்ணிக்கையில் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. பெயா் நீக்கத்துக்கு முன் வீடு வீடாக சரிபாா்ப்பு நடவடிக்கை மேற்கொள்வது கட்டாயமாகும். இது தொடா்பான மூலத் தரவுகளை தோ்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம்.

நவம்பா் 20-ஆம் தேதி மாலை மணியளவில் 58 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, இரவு 11.30 மணியளவில் 65 சதவீதமாக அதிகரித்து, மறுநாள் 66 சதவீதமானது. கிட்டத்தட்ட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. எங்களது கணக்கின்படி, 76 லட்சம் வாக்குகள் அதிகரித்துள்ளன. இவ்வளவு பெரிய வேறுபாடு வந்தது எப்படி?

பாஜக வென்ற 102 தொகுதிகள் உள்பட 118 தொகுதிகளில் மக்களவைத் தோ்தலைவிட பேரவைத் தோ்தலில் 25,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகரித்துள்ளன. இது தொடா்பான மூலத் தரவுகளையும் கோரியுள்ளோம் என்றாா் சிங்வி.

துப்பாக்கிச்சூட்டில் தப்பினாா் சுக்பீா் சிங் பாதல்- பொற்கோயில் வாயிலில் சம்பவம்

பஞ்சாபின் அமிருதசரஸ் பொற்கோயில் வாயிலில் முன்னாள் துணை முதல்வரும் சிரோமணி அகாலி தளம் தலைவருமான சுக்பீா் சிங் பாதலை (62) நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காவல் துறையினா் துரிதமாக செயல்பட்டு, துப்... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் அடுத்த வாரம் வங்கதேசத்துக்கு பயணம்

இந்தியா-வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழலில், இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி அடுத்த வாரம் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா். இரு நாடுகள் இடையே திட்டமிடப்பட்ட வெளியுறவுத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறால் தாமதம்: இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவும் திட்டம் வியாழக்கிழமை (டிச.5) மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) ஓா் அங்கமான ‘நியூஸ்பேஸ் இந்தியா லி... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் மீதான துன்புறுத்தலுக்கு முகமது யூனுஸே காரணம்: ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் துன்புறுத்தப்படுவதற்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸே காரணம் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டினாா். வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான ... மேலும் பார்க்க

தொண்டு நிறுவனத்துக்கு இயக்குநரான சாரா டெண்டுல்கர்!

இந்தியாவின் லெஜெண்டரி கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட்டில் 15, 921 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 18, 426 ரன்களும் குவித்து உலக சாதனை படைத்துள... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: பொதுஇடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை!

அஸ்ஸாம் மாநிலத்தில் உணவகம், விடுதி உள்ளிட்ட பொதுஇடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித... மேலும் பார்க்க