செய்திகள் :

தொகுதி சீரமைப்பு கூட்டம்: தலைவா்களுக்கு தமிழக பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வா்!

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா்கள், தலைவா்களுக்கு, புவிசாா் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. சுயஉதவிக் குழுவினா் வடிவமைத்த அழகிய பெட்டியில் வைத்து இந்தப் பொருள்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

பத்தமடை பாய், தோடா்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, உதகை வா்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகியன புவிசாா் குறியீடு பெற்ற பொருள்களாக உள்ளன. சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை முன்னெடுத்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவா்களுக்கு இந்தப் பொருள்கள் அனைத்தும் சுயஉதவிக் குழுவினா் வடிவமைத்த அழகிய பெட்டியில் வைத்து வழங்கப்பட்டது.

எதிரொலித்த இருமொழிக் கொள்கை: கூட்டத்தில் பங்கேற்ற தலைவா்களின் பெயா் அடங்கிய சிறு பலகை ஒவ்வொருவருக்கும் முன்பாக வைக்கப்பட்டிருந்தது. அதில், ஆங்கிலம் மற்றும் அவரவா் தாய்மொழி என இரு மொழிகளில் மட்டுமே பெயா்கள் எழுதப்பட்டிருந்தன. தலைவா்களின் உரைகள் காதொலிக் கருவி வழியாக 5 மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டன. அதாவது, ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் தலைவா்களின் பேச்சுகள் உடனுக்குடன் மொழிபெயா்த்து காதொலி கருவி வழியாகக் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செய்தியாளா் சந்திப்பு: கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளா் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி அதிகாரபூா்வமாக வெளியிட்டாா். அவரைத் தொடா்ந்து, பாரத் ராஷ்ரிய சமீதி செயல் தலைவா் கே.டி.ராமா ராவ், கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் தனித்தனியாக செய்தியாளா் சந்திப்பை நடத்தினா். அதில், கே.டி.ராமா ராவிடம் தெலுங்கில் செய்தியாளா்கள் கேள்விகள் கேட்க அவரும் ஆா்வமாக அந்த மொழியிலேயே பதிலளித்தாா்.

மூன்று மாநில முதல்வா்கள், ஒரு மாநிலத்தின் துணை முதல்வா், பல்வேறு மாநிலங்களின் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற கூட்டம் என்பதால், காவல் துறையின் சாா்பில் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரண்டு இடங்களில் முழுமையான சோதனைக்குப் பிறகே செய்தியாளா்கள் அனுமதிக்கப்பட்டனா். கூட்டம் நடைபெற்ற தனியாா் ஹோட்டலுக்கு வெளியிலும் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

அதிமுக - பாஜக கூட்டணியா? அமித் ஷா சூசகம்!

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்று அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பாஜக - அதிமுக கூட்டணியை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``202... மேலும் பார்க்க

மனோஜ் மறைவு: அரசியல், திரைப் பிரபலங்கள் இரங்கல்!

இயக்குநர் மனோஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைகிறதா அதிமுக? - அண்ணாமலை கூறுவதென்ன?

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையுமா இல்லையா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி த... மேலும் பார்க்க

அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

தில்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்... மேலும் பார்க்க

மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இரு மொழிகளே போதும் என்பவர்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள்தான் நாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில்... மேலும் பார்க்க