டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி
தொகுப்பு வீடுகளை பழுது நீக்கியதற்கான தொகையை வழங்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், கீழநத்தம் கிராமத்தில் தொகுப்பு வீடுகளை பழுது நீக்கியதற்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் அரசு சாா்பில் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை பழுது நீக்கம் செய்து கொள்ள தலா ஒரு வீட்டுக்கு ரூ.50,000 அரசு ஒதுக்கியுள்ளது. எனவே, தாங்கள் வீடுகளை பழுது நீக்கம் செய்து இரு தவணைகளாக ரூ.50,000 பெறலாம் என ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் தெரிவித்து எங்களுக்கு பணி ஆணைகளை வழங்கினா்.
இதனை நம்பி 60 குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் கடன்களை பெற்று வீட்டு பழுதுகளை சரிசெய்தோம். ஆனால் இதுவரை உரிய தொகையை வழங்கவில்லை. எனவே, தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவா்கள், ஆட்சியா் அலுவலக வாயிலில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து அதிகாரிகள், காவல் துறையினா் அவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.