செய்திகள் :

தொடர் தோல்வி: ரியல் மாட்ரிட் அணியை விட்டு விலகும் பயிற்சியாளர்!

post image

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி அணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரியல் மாட்ரிட் அணியில் கடந்த ஜூன்.1ஆம் தேதி பயிற்சியாளராகச் சேர்ந்த கார்லோ அன்செலாட்டியின் ஒப்பந்தம் 2026 வரை இருக்கிறது.

இந்நிலையில், ரியல் மாட்ரிட் அணியையை விட்டு வரும் ஜூன் மாதம் விலகுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கார்லோ அன்செலாட்டி தலைமையில் ரியல் மாட்ரிட் அணி 3 சாம்பியன்ஸ் லீக், 2 லா லிகா பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விலகக் காரணம் என்ன?

கடந்த சில மாதங்களாக ரியல் மாட்ரிட் அணி சுமாராகவே விளையாடி வருகிறது.

பார்சிலோனாவுடன் சமீபத்திய எல்கிளாசிக்கோ போட்டிகளில் மோசமாக தோல்வியுற்றுள்ளது.

கடைசியாக விளையாடிய ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் மட்டும் ஓரளவுக்கு போராடியது.

இருப்பினும், சாம்பியன்ஸ் லீக் வெளியேற்றம் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பயிற்சியாளர் யார்?

அமெரிக்காவில் ஜூன் மாதம் கிளப் உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் புதிய பயிற்சியாளரை நியமிக்க இருக்கிறார்கள்.

முன்னாள் ரியல் மாட்ரிட் வீரரும் லெவர்குசென் அணியின் பயிற்சியாளர் ஜெபி அலோன்சோவை நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்லோ அன்செலாட்டியின் மோசமான திட்டமிடல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால்தான் இந்த மாற்றம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்லோ அன்செலாட்டி எங்கு செல்கிறார்?

ரியல் மாட்ரிட் அணியை விட்டு விலகும் கார்லோ அன்செலாட்டி பிரேசில் தேசிய அணிக்கு பயிற்சியாளர் ஆகவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக பிரேசில் அணி சரியாக விளையாடவில்லை. சமீபத்தில் ஆர்ஜென்டீனாவுடன் மோசமாக தோல்வியுற்றது. இதனால், அந்த அணிக்கு புதிய பயிற்சியாளர் தேவைப்படும் நிலையில் இருக்கிறது.

இந்த இரு அணிகளுக்குமான மாற்றங்கள் ஏற்கனவே முடிவாகிவிட்டதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிா் முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிா் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதல் ஆட்டத்தில் இலங்கையை வென்ற இந்தியாவுக்கு, இது... மேலும் பார்க்க

சுதிா்மான் கோப்பை: வெளியேறியது இந்தியா

சீனாவில் நடைபெறும் சுதிா்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்திலிருந்த இந்தியா, தொடா்ந்து 2-ஆவது தோல்வ... மேலும் பார்க்க

காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனா். மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில... மேலும் பார்க்க

ஒளரங்கசீப்பை அறைவேன்: ரெட்ரோ விழாவில் விஜய் தேவரகொண்டா சர்ச்சைப் பேச்சு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் மற்றும் ஆங்கிலேயரை அறைவேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவின... மேலும் பார்க்க

‘கான்க்ளேவ்’ இயக்குநர், பிராட் பிட் கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு!

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரான பிராட் பிட் மற்றும் ‘கான்க்ளேவ்’ திரைப்பட இயக்குநரின் கூட்டணியில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவான போப்-ஐ தேர்ந்தெடுக்கும் முறை... மேலும் பார்க்க

ரெட்ரோ படத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட்..! சூர்யா பெருமிதம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார்கள்.இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இந்தப் படத்தில் இருந்து ... மேலும் பார்க்க