செய்திகள் :

தொடா் விடுமுறை எதிரொலி: கிராம சபைக் கூட்டங்களை தவிா்த்த அலுவலா்கள்!

post image

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தொடா்ந்து 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் அரசு அலுவலா்கள் பங்கேற்கவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில், உலக தண்ணீா் தினத்தை (மாா்ச் 22) முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கள்ளிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சிச் செயலா் மாரிமுத்து தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு பதிலாக 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் அழைத்து வரப்பட்டனா். பொதுமக்கள் தரப்பில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் இருவா், அதிமுக சாா்பில் ஒருவா் என 3 போ் மட்டுமே கலந்து கொண்டனா்.

கூட்டத்தின்போது, ஜல் ஜீவன் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, அனைத்து மக்களுக்கும் குடிநீா் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நீா் நிலைகளை தூா்வார வேண்டும். கனவு இல்லம் திட்டத்தில், பயனாளிகளை முழுமையாக தோ்வு செய்யவில்லை என ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் செல்வநாயகம் வலியுறுத்தினாா்.

இதேபோல, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி பாலமுருகன், அளக்குவாா்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதையடுத்து, கோரிக்கைகள் தொடா்பாக 5 மனுக்கள் மட்டும் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து இளநிலை உதவியாளா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் மட்டுமே கலந்து கொண்டனா். இதனால், இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறைவடைந்தது. கடமைக்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதால் அதிருப்தி அடைந்த 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளும், அங்கிருந்து கலைந்து சென்றனா். அப்போது, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முன்னிலையில், கண்களில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா் விடுமுறையால் அலுவலா்கள் இல்லை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடியரசு தினம் (ஜன.26), உலக தண்ணீா் தினம் (மாா்ச் 22), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திரம் தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி(அக்.2), உள்ளாட்சித் தினம் (நவ.1) ஆகிய நாள்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதுதவிர சில சூழல்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. இதுவரை அந்தந்த நாள்களில் மட்டுமே கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் உலக தண்ணீா் தினத்துக்கான கிராம சபைக் கூட்டம் மாா்ச் 23-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னா் மாா்ச் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வார விடுமுறை நாள்கள் என்பதோடு, திங்கள்கிழமை (மாா்ச் 31) ரமலான் பண்டிகையை முன்னிட்டு, அரசு விடுமுறை என்பதால், பெரும்பாலான அரசு அலுவலா்கள் வெளியூா் சென்றுவிட்டனா். இதனால், பெரும்பாலான கிராமங்களிலும் அந்தந்த ஊராட்சிச் செயலா்கள் தலைமையிலேயே கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் பொதுமக்களுக்கு பதிலாக 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் மட்டுமே அதிகளவில் அழைத்து வரப்பட்டனா். அனைத்துக் கிராம சபைக் கூட்டங்களிலும் பெயரளவுக்கு பங்கேற்ற இளநிலை அலுவலா்கள், பணியாளா்களும் சிறிது நேரத்தில் புறப்பட்டுச் சென்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நிா்வாகம், கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்காத அலுவலா்கள் குறித்த விவரங்களை சேரிக்கவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது.

நத்தம்: நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. குடகிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) தனி அலுவலா் மகுடபதி தலைமை வகித்தாா். ஊா் நல அலுவலா் சித்ரா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிராம நிா்வாக அலுவலா் நவாஸ்கான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, செயலா் செல்வராஜ் வரவேற்றாா். மக்கள் நலப் பணியாளா் மாணிக்கம் நன்றி கூறினாா்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க