செய்திகள் :

தொட்டாற்சிணுங்கி கம்பீர்..! மோதலில் ஈடுபட்ட கம்பீர் - ஓவல் திடலின் பிட்ச் மேற்பார்வையாளர்!

post image

இந்திய அணியின் பயிற்சியாளர் ஓவல் திடலின் பிட்ச் மேற்பார்வையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேசுபொருளாகியுள்ளது.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட்டில் போராடி தோல்வியில் இருந்து மீண்டு, போட்டியை டிரா செய்தது.

இந்தத் தொடரில் கடைசி டெஸ்ட் ஜூலை 31-இல் லண்டனில் ஓவல் திடலில் தொடங்கவிருக்கிறது.

பேட்டிங் பயிற்சியாளருடனும் சண்டை

ஓவல் திடலின் பிட்சை பார்வையிட சென்ற இந்திய அணியின் பயிற்சியாளர்களை பிட்சிலிருந்து 2.5 மீட்டர் தூரத்தில் இருந்தே பார்வையிடுமாறு ஓவல் பிட்ச் மேற்பார்வையாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், “பிட்ச்சிலிருது 2.5 மீட்டர் தூரத்தில் இருந்து பார்வையிடமாறும் கயிறைத் தாண்டி நின்று நில்லுங்கள் என்றும் கூறினார்கள். இதுமாதிரி நான் எங்கேயும் பார்த்ததில்லை.

நாங்கள் ஸ்பைக் காலணிகள் எதுவும் அணியவில்லை. அதனால், பிட்ச் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதற்காக நாங்கள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை” என்றார்.

கம்பீர் சண்டையிட்டது ஏன்?

இந்தப் பிரச்னை குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் புகார் தெர்விப்பேன் எனக் கூற, பிட்ச் மேற்பார்வையிடுபவர்கள் “நீங்கள் எங்கு வேண்டுமானலும் சென்று புகார் தெரியுவிங்கள்” எனக் கூறினார்.

இந்தப் புள்ளியில் கோடக் தலையிட்டு, “நாங்கள் பிட்சை எந்தவிதமான சேதாரமும் ஏற்படுத்தவில்லை” எனக் கூறியுள்ளார்.

பிட்ச் மேற்பார்வையாளர் பேர்டிஸ், கம்பீர் ஏன் வாக்குவாதம் செய்தார்கள் என்ற தெளிவான விளக்கம் கிடைக்காவிட்டாலும் பிட்சில் பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக பேசிக்கொண்டதாகத் தெரிகிறது.

தொட்டாற்சிணுங்கி கம்பீர்...

இந்த விவாதத்தில் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் கூறாதீர்கள். நீங்கள் வெறுமனே பிட்ச் மேற்பார்வையாளர் மட்டுமே, அதைத் தாண்டி எதுவுமில்லை” எனக் கூறியுள்ளார்.

ஓவல் பிட்ச் மேற்பார்வையாளர் ஃபோர்டிஸ் களத்தில் இருந்து அவரது அறைக்குச் செல்லும் முன்பு ரீவ்ஸ் ஸ்போர்ட்ஸில், “இது மிகப்பெரிய போட்டி, கம்பீர் தொட்டாற்சிணுங்கியாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடைசி டெஸ்ட்டில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும். அதனால், இந்தப் போட்டி இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

India head coach Gautam Gambhir was on Tuesday involved in a heated exchange of words with the Oval's chief curator Lee Fortis and was heard telling him "you don't tell us what we need to do" while pointing fingers at the groundstaff.

அதிக ரிஸ்க், அதிக பலன்... காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்!

ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாமல் சென்றது குறித்து அவர் அதிக ரிஸ்க் அதிக லாபம் தரும் எனக் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வக... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! ஜஸ்பிரீத் பும்ரா, கம்போஜ் நீக்கம்!

இந்தியாக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்திய அணி விவரம்யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில்(கேப்டன்), ... மேலும் பார்க்க

பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய க... மேலும் பார்க்க

வெளிநாட்டில் சவாலை முறியடிப்பது சிறப்பான விஷயம்: துருவ் ஜுரெல்

வெளிநாடுகளில் விளையாடுவது எப்போதும் சவலான என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டருமான துருவ் ஜுரெல் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.கட... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து மோதலால் ஆஷஸ் தொடரில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கான ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட் விற்பனை அதிகரிக்குமென கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் (ஆண்டர்சன் - ... மேலும் பார்க்க

ஆஸி. ஒருநாள் தொடர்: வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யு-19 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுக... மேலும் பார்க்க