குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?
தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன்: வைத்தியலிங்கம் கருத்து
தஞ்சாவூர்: அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆட்சியை கொண்டுவர முடியும். இல்லையென்றால் முடியாது என்று தொண்டர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
அப்படி தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்றைக்கு வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது.
ஏனென்றால் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இரண்டு பேரின் நல்ல மதிப்பை பெற்றவர் செங்கோட்டையன்.
கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சொன்னதை மனப்பூர்வமாக நான் வரவேற்கிறேன்.
ஒன்றிணைப்பு குழு என்பது குறித்து எனக்கு இன்றைக்கு தான் தெரிய வந்துள்ளது. எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை.
அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அவருடைய எண்ணம்போல் எல்லா தொண்டர்களும் விரும்புகிறார்கள் நிச்சயமாக எல்லோரும் அதை வரவேற்பார்கள்.
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை பத்து நாள்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என கெடு கொடுத்திருக்கிறார். அப்படி ஒருங்கிணைக்கப்படவில்லை என்றால் இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். பத்து நாள் கெடு முடிந்தவுடன் எனது கருத்தை நான் தெரிவிக்கிறேன்.
கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என நினைக்கிறார்கள். அதிமுக மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அதை இணைப்பதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள் என வைத்தியலிங்கம் கூறினார்.