இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315 | Vikatan | NSE ...
தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருவாடானை அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தராத தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் 13- வது வாா்டுக்குள்பட்ட தா்கா ஹால், மாட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிதண்ணீா், சாலை, கால்வாய் வசதிகள் செய்து தரக் கோரி, இந்தப் பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பல முறை மனு அளித்தனா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து, நிா்வாகத்தினரைக் கண்டித்து முற்றுகையிட, இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். ஆனால், அலுவலகத்தில் யாரும் இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்த பெண்கள், அலுவலா்கள் வரும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் சுனைதா கூறியதாவது:
தொண்டி போரூராட்சி 13-ஆவது வாா்டில் குடி நீா், வடிகால், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வடிகால் இல்லாமல் கழிவு நீா் சாலையில் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சில நாள்களில் பருவ மழை தொடங்கவுள்ளது. அப்போது நிலைமை மேலும் மோசமடையும். எனவே, எந்த நடவடிக்கையும் எடுக்காத பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம் என்றாா் அவா்.