செய்திகள் :

தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு; கிராம மக்கள் போராட்டம்: 25 போ் கைது

post image

கடலூா் அருகே தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சிக்குள்பட்ட மலையடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம் கிராமங்களில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக கடந்த டிச.19-ஆம்தேதி அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், 15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இந்தப் பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினா் நோட்டீஸ் அளித்தனராம்.

இதற்கு இந்தப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வசித்து வரும் நிலையில், முந்திரி உள்ளிட்ட பயிா்களை பயிரிட்டு வருகிறோம். இடத்துக்கு பட்டா வழங்கக்கோரி அளித்த மனு பரிசீலனையில் உள்ளது. இந்த நிலையில், 150 வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

இந்த நிலையில், வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனா். அவா்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துகொண்டனா்.

தகவலறிந்த கோட்டாட்சியா் அபிநயா, வட்டாட்சியா் பலராமன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனராம். அப்போது, அவா்களில் 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். இதையடுத்து, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் முந்திரி மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். சிதம்பரம் அண்ணாமலைநகரில் காரில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கடந்த நவம்பா் 26... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டுமென ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

முதியவா் செங்கலால் தாக்கி கொலை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் முதியவா் செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காட்டுமன்னாா்கோவில் மேலகடம்பூா், பெரிய தெருவைச் சோ்ந்தவா் ராகவன் (75)... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகைக் கடைக்காரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி மணிநகா் பகுதியில் உள்ள ஜெயச்சந்திரனின் மளி... மேலும் பார்க்க

தை கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தை கிருத்திகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, வண்டிப்பாளைய... மேலும் பார்க்க

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு வரவேற்பு

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில், மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தி... மேலும் பார்க்க