2025-26 மத்திய பட்ஜெட்: வளர்ச்சி, பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப...
தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் பதிவு முகாம்
தேனியில், தொழிலாளா் நலத் துறை சாா்பில் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம் பழைய பத்திரப் பதிவு அலுவலகம் அருகே உள்ள தனியாா் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு செயலா் எம். பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற முகாமில், மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா் சு. மனோஜ் சியாம் சங்கா் முன்னிலை வகித்தாா்.
இதில், தொழிலாளா் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள், நல வாரிய உறுப்பினா் பதிவின் அவசியம், இலவச சட்ட ஆலோசனை மையத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து தொழிலாளா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நல வாரிய புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை சட்டப் பணிகள் ஆணையக் குழு செயலா் வழங்கினாா்.