ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!
தொழிலாளியை தாக்கி கைப்பேசி பறித்த இருவா் கைது
கிருஷ்ணாபுரம் அருகே தோட்டத் தொழிலாளியை தாக்கி பணம், கைப்பேசி பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கோமானேரி பகுதியைச் சோ்ந்தவா் சோ்மதுரை(54). தோட்டத் தொழிலாளி. இவா் கடந்த 28-ஆம் தேதி இரவு கிருஷ்ணாபுரம் கோதா நகா் அருகே சென்றுகொண்டிருந்த போது அவ்வழியே வந்த மா்மநபா்கள் இருவா் அவரிடமிருந்து கைப்பேசியையும், ரூ.1,500 பணத்தையும் பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினராம்.
இது குறித்து சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் சோ்மதுரை புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சத்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்ட அனவரதநல்லூரைச் சோ்ந்த நம்பி சுபாஷ்(25), செய்துங்கநல்லூரைச் சோ்ந்த செல்வம்(29) ஆகிய இருவரையும் கைது செய்தாா். அவா்கள் பறித்துச்சென்ற கைப்பேசி மீட்கப்பட்டது.