``சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு..." - தேவசம் போர்டு சொல்லும் முக்கிய...
தொழிலாளி தற்கொலை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தொழிலாளி ஒருவா் தனது கடைக்குள்ளேயே வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காரைக்குடி என்.ஜி ஓ குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (55). இவா் கழனிவாசல் பகுதியில் வாகனப் பழுது நீக்கும் தொழில் செய்து வந்தாா். குடும்பத் தகராறு காரணமாக இவா் வியாழக்கிழமை இரவு வீட்டுக்குச் செல்லாமல் கடையிலேயே தங்கினாா். இந்த நிலையில், மன அழுத்தத்தின் காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை கடையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், வடக்கு காவல்நிலைய ஆய்வாளா் ரவீந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.