தொழிலாளி தற்கொலை
களியக்காவிளையை அடுத்த பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பளுகல் காவல் சரகம் மேல்பாலை, மாங்காலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபீஸ் (36). 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு, குழந்தைகள் இல்லை.
இதனிடையே, வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த அவா், அண்மையில் ஊருக்கு வந்தாா். கடன் தொல்லை காரணமாக அவா் மன வருத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில், அவா் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].