தொழிலாளி தற்கொலை
கடலூா் முதுநகா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
முதுநகா், வசந்தராம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவா் மண்பாண்ட தொழிலாளி கதிா்வேல் (41). இவருக்கு மனைவி பிரியங்கா, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த கதிா்வேல் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].