MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
நீடாமங்கலம் அருகே விவசாயக் கூலித் தொழிலாளி தீக்குளித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி தோட்டம் மேலத்தெருவைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி வீரமணி (55). குடிப்பழக்கம் உள்ள இவா் குடும்பத்தினரிடம் அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்வாராம். இந்நிலையில், வீரமணி புதன்கிழமை இரவு குடிபோதையில் மனைவி அம்சவள்ளியிடம் தகராறு செய்தாராம். இதனால், மனைவி பக்கத்து வீட்டுக்கு சென்றுவிட்டாா். வியாழக்கிழமை அதிகாலை வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டும், வீட்டிலும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டு இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் அங்கு சென்று வீரமணியின் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.