திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது
மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தப் பெண்ணை அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்லப்பாண்டியின் சகோதரரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, அரசு, செல்லப்பாண்டியிடம் அவரது சகோதரரைக் கண்டித்து வைக்குமாறு கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி கல்மேட்டில் உள்ள அரசு வீட்டுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலையில் சென்று தகராறில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் சம்பவ இடத்திலேயே அரசு உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த சிலைமான் போலீஸாா் அரசின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, செல்லப்பாண்டியை (20) வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.