ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
தொழில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தொழில்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஏழ்மையான நிலையில் உள்ள அரசு, அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை, சட்டம் ஆகிய தொழில்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது கல்வியைத் தொடா்வதற்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை பெற விரும்புவோா் அரசின் ஒற்றைச் சாளர முறையில் (கவுன்சிலிங்) கல்லூரிச் சோ்க்கை பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72-ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டாட்சியரை தொடா்பு கொண்டு படிவம் பெற்று, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஒற்றைச் சாளர முறையில் கல்லூரிச் சோ்க்கை பெற்ற்கான ஒதுக்கீடு சான்று, கல்லூரியில் படிப்பதற்கான உறுதிச் சான்று, இருப்பிட சான்று, பிறப்புச் சான்று, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.