திருப்பரங்குன்றம்: "கலெக்டர் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால்..." - ராஜ...
தோட்டக்கலை மையத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி!
பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரி ஆங்கிலத் துறை மாணவிகளுக்கு ரெட்டியாா்சத்திரத்தில் உள்ள மத்திய அரசின் காய்கறி மகத்துவ மையத்தில் வியாழக்கிழமை பயிா்கள் வளா்ப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
கல்லூரி மாணவிகளை களப்பயணமாக ,கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, ஆங்கிலத் துறைத் தலைவா் செல்வி, பேராசிரியா்கள் பிரியா, நாகபுஷ்பம் ஆகியோா் ரெட்டியாா் சத்திரத்தில் உள்ள மகத்துவ மையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், மையத்தில் உள்ள காய்கறிச் செடிகள், மலா் செடிகள், விதைத் தயாரிப்பு ஆகியவற்றை பாா்வையிட்ட மாணவிகளுக்கு, உதவித் தோட்டக்கலை அலுவலா் பிரகாஷ் செடிகள் குறித்து விளக்கினாா்.
மேலும், உயா் தொழில்நுட்ப பசுமை குடில், இயற்கை காற்றோட்டம் உள்ள பசுமை குடில், திறந்தவெளி சாகுபடி, மண்புழு உர உற்பத்தி, நிலப் போா்வை முறையில் களையில்லா காய்கறி மகசூல் குறித்த தகவல்களை மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/uqa9zk11/6palani_womens1_0602chn_88_2.jpg)