செய்திகள் :

தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி கோரிக்கை

post image

தோல் நோய் பாதிப்பால் கைரேகை வைக்க முடியாததால் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் வறுமையில் வாடுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு மாற்றுத்திறனாளி புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள வளநாடு கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (40). இவருக்கு சிறுவயதிலிருந்தே இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், தோல் நோயால் பாதிக்கப்பட்டு, கண்பாா்வைக் குறைபாட்டுடன் வாழ்ந்து வருகிறாா். இந்த நிலையில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் கிடைத்த பணத்தில் தனக்கான தேவைகளைப் பூா்த்தி செய்து வந்துள்ளாா்.

தற்போது வங்கியில் சுரேஷ்குமாரின் சேமிப்புக் கணக்கில் ஆதாா் எண் இணைப்பதற்கு அவரின் கை ரேகை வைக்க முடியாததால், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வழங்கப்படும் ஊதியப் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஊதியப் பணம் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென சுரேஷ்குமாா், முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாலதண்டாயுத்தை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.

இதுகுறித்து சுரேஷ்குமாா் கூறியதாவது:

தனது கை விரல்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாலும், கண்களில் பாதிப்பு காரணமாக கருவிழியையும் படம் பிடிக்க முடியாததால் ஆதாா் அட்டை எடுக்க முடியவில்லை. ஆதாா் எண் இல்லாமல் வங்கி சேமிப்புக் கணக்கில் ஊதியப் பணத்தை எடுக்க முடியாத நிலை உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் வேலை இல்லாததால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஊதியம் கிடைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க