த்ரிஷாவின் சமூக வலைதளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா?
நடிகை த்ரிஷாவின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது எக்ஸ்(முன்பு ‘ட்விட்டர்’ என்றழைக்கப்பட்டது) தளக் கணக்கை யாரோ முடக்கியுள்ளனர் என்று திரிஷா பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, தன்னுடைய எக்ஸ் தளக் கணக்கிலிருந்து வெளியாகும் பதிவுகள் அனைத்துக்கும் தான் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளார்.