`சிதையும் மக்களாட்சி; உள்ளாட்சியில் அடிபட்டுக் கிடக்கும் 70% நீதி' - திமுக அரசுக...
நகராட்சிக்கு வாடகை நிலுவை: பாஜக அலுவலகம் உள்பட 7 கடைகளுக்கு சீல்
வால்பாறையில் வாடகை செலுத்தாததால் பாஜக அலுவலகம் உள்பட 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.
வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கான வாடகையை வாடகைதாரா்கள் நகராட்சி கணினி மையத்தில் மாதந்தோறும் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்கின்றனா்.
இந்நிலையில், 2024 -25 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, வாடகை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக நகராட்சி ஆணையா் ராகுராமன் உத்தரவின்பேரில், புதுமாா்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத பாஜக அலுவலகம் உள்பட 7கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.