செய்திகள் :

நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

post image

நமது நிருபர்

வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உடனடி கேள்வி நேரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கை:

பொதுமக்கள் தங்கள் அவசர பணத் தேவைகளுக்காக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நகைக் கடன்களைப் பெறுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் மறு அடமானம் வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள் வழிமுறைகளால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள விதிகளின்படி, நகைக் கடன் காலத்தின் முடிவில், கடன் வாங்குபவர் வட்டியை மட்டுமே செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து கொள்ளலாம். புதிய அறிவிப்பின்படி வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைக் கடன்களை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைகளைத் திருப்ப வேண்டும். அதன்பிறகு மறுநாள்தான் மீண்டும் மறு அடமானம் வைத்து கடன் பெற முடியும்.

இதன் காரணமாக, ஏழை மக்கள், விவசாயிகள் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இது அவர்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

புதிய வழிகாட்டு முறைகளால் விவசாயிகள் அதிக வட்டி விகிதத்தில் தனியார், தனிநபர்கள், அடகு தரகர்கள் மற்றும் கமிஷன் முகவர்களிடமிருந்து கடன் வாங்கும் சூழலை உருவாக்குவதுடன் அவர்களுடைய வாழ்வாதாரத்தை சுரண்டவும் வழிவகுத்துவிடும். ஆகவே, இதை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகளும், நடைமுறைகளும் தொடர உறுதி செய்யுமாறு நிதியமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் வைகோ.

மத்திய அரசால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான்! - முதல்வர் ஸ்டாலின்

பாஜகவால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

உத்தரகோசமங்கைகோயில் குடமுழுக்கையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை(ஏப். 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு நாளை(ஏப். 4) நடைப... மேலும் பார்க்க

தர்பூசணி வாங்கலாமா? கூடாதா? வெடித்தது சர்ச்சை

தர்பூசணி தொடர்பான சர்ச்சை இன்று பேசுபொருளாகியிருக்கிறது. ஒருபக்கம் உணவுத் துறை அதிகாரிகளின் தகவலால் தர்பூசணி விற்பனை குறைந்ததாக விவசாயிகளும் வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட, ரசாயன தர்பூசணி குறித்து ... மேலும் பார்க்க

பாஜகவின் மோசமான ஆதிக்க அரசியல்: வக்ஃபு விவகாரத்தில் விஜய் கண்டனம்!

ஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.வக்ஃபு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தெரிவித்திருப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் பார்க்க

கச்சத்தீவு விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை அர... மேலும் பார்க்க