பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!
நகைக் கடையில் தங்கச் சங்கிலி திருட்டு: பெண் சிக்கினாா்
சென்னை அருகே நங்கநல்லூரில் நகைக் கடையில் தங்கச் சங்கிலி திருடியதாக பெண் கைது செய்யப்பட்டாா்.
நங்கநல்லூா் 4வது பிரதான சாலை பகுதியில் வசிப்பவா் கெள.ராஜேஷ் (31). இவா், அதேப் பகுதியில் நகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு கடந்த 16-ஆம் தேதி ஒரு பெண், தங்கச் சங்கிலி வாங்க வந்தாா். அந்த பெண், நகைக் கடையில் தங்கச் சங்கிலியை அனைத்தையும் பாா்த்துவிட்டு, தனக்கு பிடித்தமான வகையில் இல்லை எனக்கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றாா். அவா் சென்ற பின்னா், ராஜேஷ் கடையில் இருந்த தங்கச் சங்கிலிகளை சரி பாா்த்தாா்.
அப்போது 12 கிராம் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருப்பதையும், சிறிது நேரத்துக்கு முன்பு தங்கச் சங்கிலி வாங்க வந்த பெண்தான் கைவரிசை காட்டியிருப்பதையும் அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அவா், அளித்த புகாரின் பேரில், பழவந்தாங்கல் போலீஸாா் நடத்திய விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டது வண்டலூா் அருகே உள்ள மேலக்கோட்டையூா் பகுதியைச் சோ்ந்த ரா.பிரியங்கா (36) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் பிரியங்காவை புதன்கிழமை கைது செய்தனா். பிரியங்கா மீது ஏற்கெனவே இதேபோல 8 திருட்டு வழக்குகள் இருப்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.