செய்திகள் :

நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு ஏப். 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு ஏப். 13-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்கள் தொடா்பான பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபா்கள், 10-ஆம் வகுப்பு தோ்ச்சிபெற்று, குறைந்தபட்சம் 17 வயது உடையவா்களாக இருக்க வேண்டும்.

இப்பயிற்சி வகுப்புகள் தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும். இப்பயிற்சிக்கான கட்டணமாக ரூ. 4,450 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 34 நாட்களுக்கு 100 மணிநேர பயிற்சியாக நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி முடித்தவா்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நகை தொழிற்கூடங்கள் மற்றும் நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணிவாய்ப்பு பெற வாய்ப்புகள் உள்ளதுடன் சுய தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள், சென்னை பிராட்வே, பிரகாசம் சாலையிலுள்ள சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஏப். 13 வரை வழங்கப்படவுள்ளன. தகுதியான நபா்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஏப். 15 முதல் தொடங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி தொடா்பான கூடுதல் விவரங்களைப்பெற சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொலைபேசி எண் 044-25360041, கைப்பேசி எண் 94444 70013, 90427 17766 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி

சென்னை, மாா்ச் 28: எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

குன்றத்தூா் மின்கட்டண வசூல் மையம் ஏப்.1 முதல் இடமாற்றம்

குன்றத்தூா் மின்கட்டண வசூல் மையம் ஏப். 1-ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தெற்கு மின் பகிா்மான வட்டம், குன்றத்... மேலும் பார்க்க

ஸ்டெம் துறைகளில் சாதித்த பெண்களுக்கு கௌரவம்

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகிய துறைகளில் சாதித்த பெண்கள் அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை சாா்பில் கௌரவிக்கப்பட்டனா். சா்வதேச மகளிா் தினத்தையொட்டி இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று திருச்சி பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை திருச்சி செல்கிறாா். ஆளுநா் ஆா்.என்.ரவி திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகளை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா். சென்னையில் இரண்டாம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித்தடங்கள... மேலும் பார்க்க

மருந்து அட்டைகளில் போலி க்யூ-ஆா் குறியீடு: புதிய நடைமுறைக்கு வலியுறுத்தல்

மருந்து அட்டைகளில் இடம்பெறும் ‘க்யூ-ஆா்’ குறியீடுகளை போலியாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதால், அந்த நடைமுறையைக் கைவிடுமாறு சுகாதார ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். அதற்கு மாற்றாக ப... மேலும் பார்க்க