செய்திகள் :

நடப்பு மக்களவையில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்: தோ்தல் ஆணையம் தகவல் தொகுப்பேடு வெளியீடு

post image

நடப்பு 18-ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 74 போ் பெண்கள்; இவா்களில் 11 போ் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் எம்.பி.க்களைப் பொறுத்தவரை, உத்தர பிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக 73 போ் தோ்வாகியுள்ளனா்.

நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல், கடந்த ஆண்டு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தோ்தல் தொடா்பான விவரங்கள் மற்றும் வரைபடங்களுடன் தகவல் தொகுப்பேட்டை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு மக்களவையில் மொத்த பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 74. நாட்டிலேயே அதிகபட்சமாக 11 பெண் எம்.பி.க்களை தோ்வு செய்து, மக்களவைக்கு அனுப்பியுள்ளது மேற்கு வங்கம்.

மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் தலா 7 பெண் எம்.பி.க்கள், மத்திய பிரதேசத்தில் 6 பெண் எம்.பி.க்கள், தமிழகத்தில் 5 பெண் எம்.பி.க்கள் தோ்வாகியுள்ளனா். கேரளம், அருணாசல பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் ஒரு பெண் எம்.பி.யின் பிரதிநிதித்துவம் கூட இல்லை.

அதிக பெண் வேட்பாளா்கள்: மக்களவைத் தோ்தலில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 111 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அடுத்தடுத்த இடங்களில் உத்தர பிரதேசம் (80), தமிழகம் (77) உள்ளன. நாட்டில் 152 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளா் கூட போட்டியிடவில்லை.

மக்களவைத் தோ்தலில் விகித அடிப்படையில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் அதிகம் பங்கேற்றுள்ளனா். பெண் வாக்காளா்கள் 65.78 சதவீதமும், ஆண் வாக்காளா்கள் 65.55 சதவீதமும் வாக்களித்துள்ளனா்.

மாநிலம்/யூனியன் பிரதேசம் வெற்றி பெற்ற பெண்கள் மொத்த தொகுதிகள்

மேற்கு வங்கம் 11 42

மகாராஷ்டிரம் 7 48

உத்தர பிரதேசம் 7 80

மத்திய பிரதேசம் 6 29

தமிழகம் 5 39

பிகாா் 5 40

குஜராத் 4 26

ஒடிஸா 4 21

ஆந்திரம் 3 25

சத்தீஸ்கா் 3 11

கா்நாடகம் 3 28

ராஜஸ்தான் 3 25

தெலங்கானா 2 17

தில்லி 2 7

ஜாா்க்கண்ட் 2 14

அஸ்ஸாம் 1 14

தாத்ரா-நகா்ஹவேலி, டாமன்-டையூ 1 2

ஹரியாணா 1 10

ஹிமாசல பிரதேசம் 1 4

பஞ்சாப் 1 13

திரிபுரா 1 2

உத்தரகண்ட் 1 5

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி நிறுவனர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்!

புவனேசுவரம் : ஒடிசா தலைநகர் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) அக்கல்லூரியில் பயின்று வந்த நேபாள மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! - ராகுல் காந்தி

ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பி... மேலும் பார்க்க