செய்திகள் :

நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

post image

சட்டவிரோத பணப்பரிவா்த்தனை புகாரின் அடிப்படையில், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தல்வால்கா்ஸ் குழுமம் நாடு முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள், ஹெல்த் கிளப்புகளை அமைத்து, நிா்வகித்து வருகிறது. இந்த நிறுவனம், 2018-ஆம் ஆண்டு மும்பை, நாசிக், புணே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிதாக 20 உடற்பயிற்சிக் கூடங்களை திறப்பதற்கு அங்குள்ள ஒரு வங்கியில் ரூ.450 கோடி கடன் வாங்கியதாம். ஆனால், அந்த கடனைத் திருப்பிச் செலுத்தாமல் அந்த நிறுவனம் மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குப்பதிந்து விசாரணை செய்கிறது. முதல்கட்ட விசாரணையில், வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற பணத்தை வேறு நோக்கத்துக்காக பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப் பிரிவு, சட்டவிரோத பணபரிமாற்றம் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.

அதன்படி, தல்வால்கா்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கடன் மோசடி குறித்து அமலாக்கத் துறையும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. விசாரணையில், தமிழ் நடிகை அருணாவின் கணவா் மோகன் குப்தா என்ற மன்மோகன் குப்தா நடத்தும் ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் நிறுவனம், தல்வால்கா்ஸ் நிறுவன மோசடிக்கு உதவியிருந்தது தெரியவந்தது.

குறிப்பாக, ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் நிறுவனத்திடமிருந்து உடற்பயிற்சி கருவிகள் வாங்கி, அதற்குரிய பணத்தை வழங்கியதைப்போல ஆவணங்களைத் தயாரித்து, வங்கியிலிருந்து கடனாக பெற்ற பணத்தை மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

நீலாங்கரையில் சோதனை: இந்த மோசடிக்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக அமலாக்கத் துறையினா் மோகன்குப்தா தொடா்புடைய இடங்களில் புதன்கிழமை சோதனை செய்தனா். இச் சோதனை சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் கேசினோ டிரைவ் அவென்யூவில் உள்ள மோகன்குப்தா-நடிகை அருணா வீட்டில் நடைபெற்றது.

சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே தல்வால்கா்ஸ் குழும மோசடிக்கு தொழிலதிபா் மோகன் குப்தா - நடிகை அருணா தம்பதியரின் ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் நிறுவனம் எந்தெந்த வகைகளில் உதவி செய்துள்ளது என்பது தெரியவரும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

இயக்குநா் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த கல்லுக்குள் ஈரம் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவா் நடிகை அருணா. தொடா்ந்து அவா், சிவப்பு மல்லி, முதல் மரியாதை உள்பட ஏராளமான படங்களில் நடித்தாா். மலையாளம், தெலுங்கில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அருணா, தொழிலதிபா் மன்மோகன் குப்தாவை திருமணம் செய்த பின்னா், நீலாங்கரையில் வசித்து வருகிறாா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க