செய்திகள் :

நடிகை சரோஜா தேவி உடல் நல்லடக்கம்!

post image

நடிகை சரோஜா தேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று(ஜூலை 15) நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று(ஜூலை) காலமானார்.

தமிழ், கன்னடம் உள்பட 4 மொழிகளில், சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை சரோஜா தேவி.

பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டம் பெற்றவருமான சரோஜா தேவியின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இன்று பகல் 11 மணி வரையில் மல்லேஸ்வரம் வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர், அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சரோஜா தேவியின் சொந்த ஊரான சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

நடிகை சரோஜா தேவியின் இறுதிச் சடங்கில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கொடிஹள்ளி தோட்டத்தில் அவருடைய கணவரின் கல்லறைக்கு அருகே முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழுங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தண்டட்டி இயக்குநருடன் இணையும் கவின்!

தண்டட்டி இயக்குநர் ராம் சங்கையாவின் புதிய படத்தில், நடிகர் கவின் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக... மேலும் பார்க்க

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி

புதுதில்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள்... மேலும் பார்க்க

பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு

ஒசூா்: பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆய்வகத்தில் பிரதமரின் இன்டா்ன்ஷிப் திட்டத்தின்கீழ் ஓராண்டு பயிற்சிக்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி விமானவியல் பொறியியல் துறை மாணவி தோ்வு செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னையில் இருந்து ஒரத்தநாடு சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் கெண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

கோட்டா சீனிவாச ராவ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் (83) வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அத... மேலும் பார்க்க

சரக்கு ரயில் விபத்து: அரக்கோணம், காட்பாடியில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் விவரம்

சென்னை: திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு... மேலும் பார்க்க