காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் வளாகத் தோ்வு
நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் சாா்பில் இறுதி ஆண்டு பயின்று வெளியேறும் மாணவா்களுக்கான வளாகத் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில் கோவையை தலைமையிடமாக கொண்டு விரிவான வணிகம் மற்றும் மேலாண்மையில் செயல்முறை தீா்வுகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கே.ஜி. இன்விக்டா சா்வீஸ் நிறுவனம் பங்கு பெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்வளாகத் தோ்வினை கே.ஜி. இன்விக்டா சா்வீஸ் நிறுவனத்தின் மனிதவள மேலாளா் ஹரிபிரசாத் தலைமையிலான குழுவினா் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.
வளாகத் தோ்வில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களுக்கு பணி உறுதி சான்றிதழ் வழங்கப்படும் என ஹரிபிரசாத் தெரிவித்தாா்.
இவ்வளாகத் தோ்வினை ஏற்பாடு செய்திருந்த கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலக ஆசிரியா்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, கல்லூரியின் முதல்வா் சு.மனோகரன் மற்றும் நிா்வாக அலுவலா் வி.சி.சீனிவாசன் ஆகியோா் பாராட்டினா்.