செய்திகள் :

நமக்குள்ளே... 30, 40, 50 வயதுகளில் வீட்டுக்குள் காதல்... இருக்கா, இல்லையா?

post image

இந்த உலகம் சுழலும் அச்சு... ஆண் - பெண்ணுக்கு இடையிலான நேசம்தான். அதை அழுந்தச்சொல்லும், மனதின் ஆழத்திலிருந்து மேலெழுப்பிவிடும், கொண்டாடும், கொண்டாடப்படும் ஒரு தினம்... காதலர் தினம்.

வாழ்த்து அட்டைகள் முதல் பரிசுகள் வரை அது வணிகத்துக்கான நாளாக ஒரு பக்கம் ஆக்கப்பட்டிருந்தாலும்... அந்நாளில் இந்த பூமியில் பகிரப்படும், வெளிப்படுத்தப்படும் அன்பின் அளவு முடிவிலி.

இந்த இரண்டு பத்திகளைப் படித்தபோது, இதெல்லாம் 30 வயதுக்குள்ளோருக்கானது என்று ஓர் வெளியாளாக நின்று அதை வாசித்தவர்கள்... கொஞ்சம் உள்ளே வாருங்கள். காதலைக் கொண்டாட, காதல் கொண்ட நெஞ்சம் மட்டுமே போதும். அதற்கு வயது வரம்பு ஏதுமில்லை.

30 - 40 வயதிலிருக்கும் பெண்களுக்கு, குடும்பம், குழந்தைகள், அலுவலகம், உறவுகள் என அல்லாடுவதில் கணவருக்கு `ஐ லவ் யூ’ சொல்வதற்கான தருணமோ, மனநிலையோ, ஆசுவாசமோ இல்லைதான். ஆனால், அலுவல், தொழில் என ஏதோ ஒரு வெளிப்புற அழுத்தத்தால் கணவர் ஒருநாள் முகம் வாடிப்போனாலும், என்ன ஆயிற்றோ என அவர்கள் மனது சமநிலை இழந்து தவிக்குமே... அதுதானே காதல்?!

40 - 50 வயதிலிருக்கும் ஆண்கள், தங்கள் மனைவிகளின் மெனோபாஸ் கால மூட் ஸ்விங்ஸும், மன வெடிப்புகளும் அந்த வீட்டுக்குள் இறங்கும் சூழலை... பொறுமை, அரவணைப்பு, சகிப்புத்தன்மை எனத் தங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு வகையில் சமாளித்து கரையேற்றுகிறார்களே... அது பிரியத்தின் பெரும்நிலை இல்லையா?!

50 வயதுக்கு மேல் சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் எனப் பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பிக்கும். இணையாக, பிள்ளைகளின் பொறுப்புகளும் வளர்ந்து நிற்கும். என்றாலும், ஒருவருக்கு ஒருவர் அவர்கள் மாத்திரை, சிகிச்சை விஷயங்களில் கொடுத்துக்கொள்ளும் கவனமும், நினைவூட்டல்களும், வலியுறுத்தல் களும்... பழுத்த நேசத்தின் ரேகைகள்தானே?!

இப்போது சொல்லுங்கள்... நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது இதில் எந்த நிலை காதல் வாழ்க்கை? `எல்லாம் சரிதான். ஆனா... எதுக்கெடுத்தாலும் சண்டைதான்...’ என்ற சலிப்புக் குரல்கள் சில கேட்கின்றனதான்.

இரண்டு தனிப்பட்ட மனிதர்கள் சேர்ந்து ஒரு கூரையின் கீழ் வாழும்போது, சண்டை, சச்சரவுகள், விலக்கங்கள் இல்லாத ஆண் - பெண் உறவு என்பது சாத்தியமில்லைதானே தோழிகளே?! ஆனால், அந்தச் சின்னச் சின்ன கிழிசல்களை எல்லாம் ஒட்டிவிடும் மைதான்... மையல். லேசான சிரிப்பு விரிகிறது பாருங்கள்... இதே வெட்கத்துடன் அந்த மை டப்பாவை நிரப்பிக்கொண்டே இருங்கள்.

ஆம்... காதலின் சாரம் நிறைந்தே இருக்கிறது உங்கள் வீடுகளில். அதை அவ்வப்போது வார்த்தைகளாக வெளிப்படுத்தித்தான் பாருங்களேன்... நிகழும் ஒரு மேஜிக்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

50 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஸ்டெல்லா மேரிஸ்' மாணவிகள் ரீ-யூனியன்; ஆனால், ரெண்டு கண்டிஷன்

இருபதாண்டுகள், இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துப் படித்த பள்ளி, கல்லூரிகளில் ரீ-யூனியன் நிகழ்ந்து பார்த்திருப்பீர்கள். அரை சதம் கடந்த ரீயூனியன் பார்த்திருக்கிறீர்களா? சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூர... மேலும் பார்க்க

விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச்செல்ல அனுமதி- இந்த ரூல்ஸ் தெரியுமா?

சர்வதேச விமானங்களை போன்று உள்நாட்டு விமானங்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. பலரும் இந்தியாவுக்குள்ளே பயணிக்க விமானத்தையே தேர்வு செய்கின்றனர்.உள்நாட்டு விமானங்களில் பயணிக்கவும் பல்வேறு ... மேலும் பார்க்க

பொட்டுத்தங்கம் கிடையாது; மஞ்சக்கயிறே தாலி..! கிராமத்தின் வினோத பழக்கம் - Explainer

இது தை மாசம். முகூர்த்தங்கள் நிறைஞ்ச மாசம். இப்படித்தான் ஒரு தை மாசத்துல அருப்புக்கோட்டைக்கு பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துல நடந்த கல்யாணத்துக்குப் போயிருந்தோம்.குண்டுமணி தங்கம்கூட கோக்காம வெறும் மஞ... மேலும் பார்க்க

Union Budget 2025: நிர்மலா சீதாராமன் அணிந்துவந்த 'மதுபானி' சேலை; பரிசளித்த பத்மஶ்ரீ யார் தெரியுமா?

கடந்த 7 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டிவரும் சேலை பேசுபொருளாகி வருகிறது.தொடர்ந்து 8வது முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்த நிர்மலா சீதாராமன், வெள்ளை நிற கைத்தறி பட... மேலும் பார்க்க

Elon Musk: "என் மகன் ரோல்ஸ் ராய்சில் பள்ளிக்குச் சென்றான்"- கட்டுக்கதைகளை உடைக்கும் மஸ்க்கின் தந்தை

எலான் மஸ்க் தான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்ததாகவும், அதிக வருமானமில்லாதவர்களைப் போன்ற குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்ததாகவும் பேசியிருக்கிறார். ஆனால் அவரது தந்தை இந்த கருத்துக்கு மாறாக, தான் ம... மேலும் பார்க்க