செய்திகள் :

நமோ நமச்சிவாய..! சாய் பல்லவியின் தண்டேல் பட பாடல் அப்டேட்!

post image

நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படத்தின் 2ஆவது பாடல் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகை சாய்பல்லவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் நடிக்கிறார்.  நாக சைதன்யாவின் 23வது படமான ‘தண்டேல்’ படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் திரைப்படத்திற்கு தென்னிந்தியா  முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நமோ நமச்சிவாய என்ற பாடல் ஜன.4ஆம் தேதி மாலை 5.04மணிக்கு வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படம் பிப்.7ஆம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்றது.

சமீபத்தில் தமிழில் வெளியான அமரன் படத்திலும் சாய் பல்லவி சிறப்பாக நடித்ததாக பலரும் பாராட்டை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 8: வெளியேறிய பிறகு வர்ஷினியை சந்தித்த ராணவ்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகர் ராணவ், வர்ஷினியை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 8 வது வாரத்தில் வர்ஷ... மேலும் பார்க்க

ரஜினி - 50: மறுவெளியீடாகும் படையப்பா!

நடிகர் ரஜினிகாந்த்தின் படையப்பா திரைப்படம் மறுவெளியீடாக உள்ளது.90களில் பாட்ஷா, அண்ணாமலை படங்கள் பெற்ற வெற்றிகளையும் அதனால் உச்சிக்குச் சென்ற ரஜினியின் புகழையும் கட்டிக்காத்த மற்றொரு ரஜினி படம் - படையப... மேலும் பார்க்க

எமர்ஜென்சி 2ஆவது டிரைலர்!

நடிகையும் இயக்குநருமான கங்கனா ரணாவத் எமர்ஜென்சி படத்தின் 2ஆவது டிரைலரை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் ப... மேலும் பார்க்க

லைகாவால் கேம் சேஞ்சருக்கு சிக்கல்?

லைகா தயாரிப்பு நிறுவனத்தால் கேம் சேஞ்சர் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரை... மேலும் பார்க்க

ஹனி ரோஸ் பதிவில் தரக்குறைவான கமெண்ட்டுகள்..! 30 பேர் மீது வழக்குப் பதிவு!

மலையாள நடிகை ஹனிரோஸின் சமூக வலைதளப் பதிவில் தரக்குறைவாக கமெண்ட்டு செய்த 30 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

டாக்ஸிக் புதிய அறிவிப்பு!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000... மேலும் பார்க்க