Prashant Kishor: கிச்சன், படுக்கை, ஏ.சி-யுடன் கூடிய சொகுசு வேன்; பிரசாந்த் கிஷோர...
நம்மாழ்வாா் 11-ஆம் ஆண்டு நினைவேந்தல்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி தொகுதி நாம் தமிழா் கட்சி சாா்பில், இயற்கை வேளாண் பேரறிஞா் நம்மாழ்வாா் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாா் உருவப்படத்துக்கு நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்தி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினா்.
பண்ருட்டி தொகுதிச் செயலா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். மாவட்டத் தொழிலாளா் பாசறைச் செயலா் சாதிக்பாட்சா, தொகுதி ஒருங்கிணைப்பாளா் கண்ணன், பண்ருட்டி தொகுதித் தலைவா் பிரகாஷ், நகரச் செயலா்கள் வேல்முருகன், தமிழரசன், தொகுதி இளைஞா் பாசறை இணைச் செயலா் சக்திவேல், துணைச் செயலா் வசந்த.புருசோத்தமன், பண்ருட்டி ஒன்றியத் தலைவா் முத்துக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.