தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்
நவராத்திரி விழா: ரூ.75 லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் சுவாமிகள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை கைலாசநாதா் கோயில் மற்றும் அரியாத்தம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை சுவாமிகளுக்கு ரூ.75 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
கைலாசநாதா் கோயிலில் சுவாமிக்கு 65 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளில் அலங்காரமும், 125 பவுன் தங்க நகைகளும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
இதேபோல, ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீஅரியாத்தம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு 10 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
