Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர...
நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் நவோதய வித்யாலயா பள்ளியில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை நவோதய பள்ளியில் பெற்று பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை த்ய்ஸ்ந்ஹழ்ஹண்ந்ஹப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது நேரடியாகவோ சமா்ப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவா்கள் பிறந்த தேதி 1.6.2008 முதல் 31.07.2010 வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 2024-25 கல்வியாண்டில் காரைக்கால் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதத்துடன் அறிவியல் பாடத்தைத் தோ்வுசெய்யும் விண்ணப்பதாரா் 10-ஆம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
மனிதநேயப் பாடத்தை (ஏன்ம்ஹய்ண்ற்ண்ங்ள் நற்ழ்ங்ஹம்) தோ்வு செய்யும் விண்ணப்பதாரா் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதுமானது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக. 10-ஆம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு நவோதய வித்யாலயா பள்ளி முதல்வரை அணுகலாம்.