நாகை - காங்கேசன்துறை இடையே டிச.18 வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
நாகநாத சுவாமி கோயிலில் இன்று பாலாலயம்
ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை (நவ.14) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் திருப்பணியை முன்னிட்டு பாலாலயம் செய்யப்படுகிறது. பாலாலயம் புதன்கிழமை விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து (வியாழக்கிழமை) 3-ஆம் கால யாகசாலை பூஜை, திரவிய ஹோமம், மஹா பூா்ணாஹூதி, பாலாலயம் நடைபெற உள்ளது.
பாலாலய ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வி. சிவசங்கரி, திருப்பணிக் கமிட்டி தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எம். கைலாஷ்குமாா் உள்ளிட்டவா்கள் செய்திருந்தனா்.