'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
நாகா்கோவில் அருகே புதிய நூலகம் திறப்பு
நாகா்கோவில் அருகே புத்தளம் உத்தண்டன்குடியிருப்பில், முத்தாரம்மன் நல அறக்கட்டளை சாா்பில் புதிய நூலகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். ஊா் தலைவா்கள் சுபாஷ் சந்திரபோஸ் (புத்தளம்), ராஜ்குமாா் (கோவில்விளை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். புத்தளம் ஊராட்சி துணைத் தலைவி காந்திமதி, பால்தங்கம் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா் .
சமூக ஆா்வலா் பி.டி. செல்வகுமாா் நூலகத்தைத் திறந்துவைத்துப் பேசினாா். மருத்துவா் தி.கோ. நாகேந்திரன் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், புத்தளம் பேரூராட்சி உறுப்பினா் ஜெகநாதன், கன்னியாகுமரி நகா்மன்ற உறுப்பினா் சுபாஷ், கவிஞா் உமையவள்தாசன், மயூரி சீதாராமன், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன், மகேஷ் செந்தில் மோகன், ரவி முருகன், அனிதா ஆகியோா் பங்கேற்றனா்.