சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
நாகை மாவட்டத்தில் 55 பயனாளிகளுக்கு ரூ.57.50 லட்சம் கடன் உதவி
நாகை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் பயனாளிகளுக்கு ரூ.57.50 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டத்தின்கீழ் செல்வி என்பவருக்கு ரூ. 2.25 லட்சம் மானியத்துடன் ரூ.4.50 லட்சம் திட்டத் தொகை, 41 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டத்தின் கீழ் கறவை மாடு வாங்க ரூ.20. 50 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.41 லட்சம் கடனுதவிகளை வழங்கினாா்.
மேலும் 1 பயனாளிக்கு பெட்டிக் கடை வைக்க ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய ரூ.1 லட்சம் கடனுதவி, அன்னை தெரசா மகளிா் சுய உதவிக் குழுவுக்கு கறவை மாடு வாங்க ரூ.5 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடனுதவி என மொத்தம் 55 பயனாளிகளுக்குரூ.28.75 லட்சம் மானியம், வங்கிக்கடன் ரூ. 28.75 லட்சம் என மொத்தம் ரூ. 57.50 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தாட்கோ மாவட்ட மேலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.