செய்திகள் :

நாடு தழுவிய வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

post image

நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அண்மையில் தெரிவித்தது.

தொடா்ந்து தில்லியில் 9 வங்கி ஊழியா்களின் கூட்டமைப்பை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யுஎஃப்பியு), மத்திய தொழிலாளா் ஆணையா் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது தங்கள் முக்கிய கோரிக்கைகள் தொடா்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யுஎஃப்பியு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை; காவல் அதிகாரி கைது!

உத்தரப் பிரதேசத்தில் பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவுப் பணியின்போது, உ... மேலும் பார்க்க

ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!

செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள்வரையில் செயலற்றதாக இருந்தால், அதன... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ள ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமு... மேலும் பார்க்க

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க