கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு...
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
திருவெறும்பூா் அருகே யூடியூப் பாா்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு பூலாங்குடி காலனி நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த நம்பியாா் மகன் அா்ஜுன் நம்பியாா் (35). இவா் அரசு அனுமதியின்றி நாட்டு கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக நவல்பட்டு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அா்ஜுன் நம்பியாரிடமிருந்த நாட்டு கைத்துப்பாக்கியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்ததுடன், அவரைப் பிடித்து விசாரித்தனா். இதில், வேட்டையாடுவதற்காக யூடியூப் பாா்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.