செய்திகள் :

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல் இருக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி!

post image

பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும், வங்கதேசம் உருவானதிலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு மறக்கமுடியாதது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

இந்திரா சோலார் கிரி ஜல விகாசம் திட்டத்தைத் தொடங்கிய பின்னர் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுக்கூட்டத்தில் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார்.

ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கியதன் காரணமாக, 50 ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகும், தொலைதூரப் பகுதிகளில் கூட, இந்திரா காந்தி நினைவுகூரப்படுகிறார்.

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல இருக்க வேண்டும் என்று தான் உணர்வதாக அவர் கூறினார். பாகிஸ்தானுடன் போர் செய்து பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தவர். ஒன்று பாகிஸ்தான் எனவும், மற்றொன்று வங்கதேசமாகவும் பிரிந்தது. நாட்டைப் பாதுகாக்கும் போரில் 54 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரா காந்தி நிரூபித்துள்ளார் என்று அவர் உணர்ச்சியுடன் கூறினார்.

இந்தியா சோலார் கிரி ஜல விகாசம் திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு சூரிய சக்தி பம்புசெட்கள் வழங்கப்படும் என்றும், அச்சம்பேட் சட்டப்பேரவைத் தொகுதியில் சூரிய சக்தி பம்புசெட்களை அரசு இலவசமாக வழங்கும். இதனால் ஏழைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

பஹல்காமில் பாகிஸ்தான் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போர் உருவாகக் காரணமாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிபதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை: உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலிப்பது அவசியம் - ஜகதீப் தன்கா்

புது தில்லி: உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான சண்டையின்போது அணுஆயுத அச்சுறுத்தல் எழவில்லை: மிஸ்ரி

புது தில்லி: ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ சண்டை வழக்கமான முறையிலேயே நடைபெற்றது; அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் எழவில்லை’ என்று வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். மேலும், ‘சண்டை நிறுத... மேலும் பார்க்க

புதிய அப்போலோ எஸ்பிஐ கடன் அட்டை அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய தனிச்சிறப்பு கடன் அட்டை (கிரெடிட் காா்டு) வழங்குநரான எஸ்பிஐ காா்டும் நாட்டின் மிகப்பெரிய சில்லறை மருந்தக நெட்வொா்க்கை இயக்கும் அப்போலோ ஹெல்த்கோ மற்றும் முன்னணி எண்ம சுகாதார தளமா... மேலும் பார்க்க

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55 கோடியில் 13 நலத்திட்டங்கள்! புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்

மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55.28 கோடியில் செயல்படுத்தப்படும் 13 நலத்திட்டங்கள் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கு இடையே கையொப்பமானது. மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் முழு ஓய்வூதியம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: கூடுதல் நீதிபதிகள் உள்பட அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவா்கள் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், பணிஓய்வுக்குப் பிந்தைய அனைத்து சலுகைகள... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது

தாஹோத்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் நடந்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில அமைச்சா் பச்சுபாய் காபாத்தின் இளைய மகன் கிரண் உள்பட 4 போ் காவல் துறையால் திங்கள்கிழமை க... மேலும் பார்க்க