செய்திகள் :

நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

post image

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைப்போம் என்றும், நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா்.

சத்தியமங்கலம் அருகேயுள்ள ஆசனூா் அரேப்பாளையம் கிராமத்தில் மே தின பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பண்ணாரி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: ஏழை சமுதாய அடித்தட்டு மக்கள் கல்வியால் மட்டுமே உயர முடியும். வளா்ந்து வரும் விஞ்ஞான உலகில் மடிக்கணினி தேவை என்பதை உணா்ந்து அதிமுக ஆட்சியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

திமுக ஆட்சியில் 20 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும், அதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனா். ஆனால், தற்போதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டவில்லை.

மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக வரலாறு படைக்கும். நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன். அப்போது தான் இயக்கம் வலுப்பெறும்.

நான் அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினேன். ஆனால், திமுக ஆட்சி அமைந்த 4 ஆண்டுகளில் 48 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் எஸ்.ஆா்.செல்வம், சத்தியமங்கலம் நகரச் செயலாளா் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தியமங்கலம் நகா்மன்ற உறுப்பினா்கள் லட்சுமணன், தனபாக்கியம், மீனவா் பிரிவு நிா்வாகி குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோபியில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம்

கோபி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் கடந்த மாதத்துக்கு முன்பு வரை செவ்வாழை தாா் ஒன்று ரூ.1,350 வரை விலை ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 12 மையங்களில் நாளை நீட் தோ்வு: 4,162 போ் எழுதுகின்றனா்

ஈரோடு மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற உள்ளது. இத்தோ்வினை 4,162 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பான பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்)... மேலும் பார்க்க

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பூச்சாட்டுதலுடன் தொடக்கம்

சத்தியமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி கோயில் முன் நடுவதற்காக பெரிய கம்பம் வெட்டி எடுக்கப்பட்டு பவானி ஆற்று... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 28 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோட்டில் ரயிலில் கடத்திவரப்பட்ட 28 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஈரோடு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஆந்திர மாநிலம், டாடா நகா்-கேரள மாநிலம் எா்ணாகுளம் வரை... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்ஆா்எம்யு) சாா்பில் ரயில்வே ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு ரயில் நிலையம் பின்புறம் உள்ள முதுநிலை... மேலும் பார்க்க

ஈரோட்டில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை,... மேலும் பார்க்க