காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
நாமகிரிப்பேட்டையில் ரூ. 1.30 கோடிக்கு மஞ்சள் விற்பனை
ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்தில் ரூ. 1.30 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் ஏலம்போனது.
ஏலத்திற்கு விரலி ரகம் 1080 மூட்டை, உருண்டை ரகம் 430 மூட்டை, பனங்காளி 40 மூட்டை என மொத்தம் 1550 மூட்டைகள் ஏலத்திற்கு வந்திருந்தன. இந்த ஏலத்தில் விரலி ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 12 ஆயிரத்து 145 முதல் அதிகபட்சமாக ரூ. 16 ஆயிரத்து 939 வரை விலைபோனது.
அதுபோல உருண்டை குவிண்டால் ரூ. 9 ஆயிரத்து 569 முதல் அதிகபட்சமாக ரூ. 14 ஆயிரத்து 142 வரை விலைபோனது. பனங்காளி ரகம் குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 269 முதல் அதிகபட்சமாக ரூ. 28 ஆயிரத்து 375 வரை விலைபோனது. இதில் மொத்தம் ரூ. 1.30 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.