செய்திகள் :

நாமக்கல்: கடன் தொல்லையால் ரூ. 4 லட்சத்திற்கு கிட்னியை விற்ற பெண்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

post image

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக ஏழை தொழிலாளிகளைக் குறிவைத்து சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கிட்னியை விற்பதாகப் புகார் எழுந்தது.

இதனடிப்படையில் நாமக்கல் மாவட்டச் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் இரண்டு நாட்களாக பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறார்.

பள்ளிபாளையம்
பள்ளிபாளையம்

விசாரணையில், புரோக்கர் ஆனந்தன் என்பவர் கிட்னி விற்பனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் புரோக்கர் ஆனந்தன் வீட்டிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தபோது, வீடு பூட்டி இருந்தது.

இதைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார். மேலும், பலர் புரோக்கர்களாகச் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் பணத் தேவை உள்ள கூலி தொழிலாளர்களை ஆசை வார்த்தை காட்டி கிட்னி தானம் செய்தால் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் கிட்னி கொடுத்ததாகக் கூறப்படுபவர்கள், புரோக்கர்களாகச் செயல்பட்டு தங்களது உறவினர்களுக்கும் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணை

இந்த நிலையில் பள்ளிபாளையம் அரசு மருத்துவர் வீரமணி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளார். அதில், "பள்ளிபாளையம் பகுதியில் பெண்களை ஏமாற்றி கிட்னியை எடுப்பதாக சமூக வலைத்தளங்களில் புகார் கிளம்பியுள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையினர் கிட்னியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், "குடும்பத் தேவைக்காக மகளிர் குழுக்களில் கடன் வாங்கினோம். வாழ்க்கை நடத்துவதற்கான வருமானம் போதாததால் குழு கடனைத் திருப்பி செலுத்த முடியவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி குழு கடனைச் செலுத்தினோம்.

கடன் சுமை அதிகமாகி விட்டதால் வேறு வழி இல்லாமல் கிட்னி விற்றேன். இதற்காக 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். அதைப் பெற்று வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தி உள்ளேன். எனது கணவரும் கிட்னி கொடுத்துள்ளார்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை

தொடர்ந்து, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் யாரெல்லாம் கிட்னி விற்பனை செய்தது, புரோக்கராகச் செயல்பட்ட ஆனந்தன் எங்குத் தலைமறைவாக உள்ளார் என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``என் மரணத்துக்கு காரணம்..'' - நொய்டா பல்கலை. மாணவி கடிதம்; பேராசிரியர்கள் கைது.. என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் சார்தா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி ஜோதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் பழகி, லிவ் இன் உறவில் இருந்த பெண் போலீஸை கொன்ற CRPF வீரர்.. என்ன நடந்தது?

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள அஞ்சார் போலீஸ் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அருணாபென். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் திலீப் என்பவ... மேலும் பார்க்க

சிகிச்சையில் இருந்த மனைவியை மருத்துவமனைக்குள் புகுந்து குத்தி கொன்ற கணவர்; குளித்தலையில் கொடூரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ரூத். இவர், ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் ஸ்ருதி (வயது: 27) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள... மேலும் பார்க்க

மும்பை ரயில் நிலையம்: பாலியல் உறவுக்கு மறுத்த பெண்; ரயிலில் தள்ளிக் கொன்ற நபர்; என்ன நடந்தது?

மும்பை ரயில் நிலையங்களில் பொதுவாகவே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மும்பை புறநகரில் உள்ள திவா ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ர... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: குழந்தைகள் கண் முன் தாய் வெட்டிக் கொலை; சாயல்குடி அருகே கொடூரம்; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க

``மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' - விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபு... மேலும் பார்க்க