செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95 டிகிரி மற்றும் 77 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வரும் சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் ஈக்கோழை நுண்கிருமிகள் தாக்கத்தாலும் மற்றும் சுவாச மண்டல நோய் பாதிப்பாலும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. பண்ணையாளா்கள் குடிநீரைப் பரிசோதனை செய்தும், கால்நடை மருத்துவா்களின் அறிவுரைப்படி தகுந்த நோய்த் தடுப்பு முறைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காருடன் மாயமான பள்ளிபாளையம் பிடிஓ வீடு திரும்பினாா்

பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் (பிடிஓ) பிரபாகரன் திடீரென மாயமான நிலையில் சனிக்கிழமை வீடுதிரும்பினாா். நாமக்கல் பொய்யேரிக்கரை செட்டிக்குளத் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (53). இவா், பள்ளிபாளையம் ... மேலும் பார்க்க

செப்.9-ல் வளையப்பட்டி, எருமப்பட்டியில் மின் தடை

வளையப்பட்டி, எருமப்பட்டியில் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி துணை ம... மேலும் பார்க்க

சந்திர கிரஹணம்: நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும்

சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரஹணத்தையொட்டி பூஜைகளை முடித்து அன்... மேலும் பார்க்க

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின. நாமக்கல்-பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று திரும்பியத... மேலும் பார்க்க

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோ... மேலும் பார்க்க

கோயில் பூசாரிகளுக்கு மாடு வழங்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த மாடுகள் கோயில் பூசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் மாடுகளை காணிக்கையா... மேலும் பார்க்க